உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூலித்தொழிலாளிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது

கூலித்தொழிலாளிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது

வானுார், : வானுார் அருகே பைக்கை ரேஸ் செய்த பிரச்னையில், கூலித்தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். வானுார் அடுத்த ராவுத்தன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார், 42; இவர் நேற்று முன்தினம் இரவு ஆரோபுட் பிஸ்கட் கம்பெனி எதிரில் உள்ள ஹாலோ பிளாக் தொழிற்சாலை வாசலில் நின்றிருந்தார். அங்கு பைக்கில் வந்த ராவுத்தன்குப்பத்தை சேர்ந்த அய்யனார், 35; பைக்கின் ஆக்சிலேட்டரை வேகமாக ரேஸ் செய்து சத்தம் எழுப்பியுள்ளார். சத்தம் அதிகரித்ததால், சசிக்குமார், அய்யனாரை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த அய்யனார், சசிக்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டல் விடுத்ததோடு, தாக்க முயற்சித்தார். இதனை, ஹாலோ பிளாக் தொழிற்சாாலையில் வேலை செய்து வந்த, திருவண்ணாமாலை மாவட்டம், போளூரை சேர்ந்த கார்த்திகேயன், 31; என்பவர் தடுக்க முயற்சித்தார்.அப்போது, கார்த்திகேயனுக்கு கத்தி வெட்டு விழுந்தது. கையில் பலத்த காயம் அடைந்த கார்த்திகேயன் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து சசிக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அய்யனாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை