உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

விழுப்புரம்: கிணற்றில் குளித்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணிரில் மூழ்கிய வாலிபர் இறந்தார். விழுப்புரம் அடுத்த சென்னாகுனத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் விஜய், 25; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த சந்திரபாபு, 23; என்பவருடன் அங்குள்ள கிணற்றில் குளித்தார். அப்போது, மூச்சுதிணறல் ஏற்பட்டு விஜய் தண்ணீரில் மூழ்கினார். தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று விஜயை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக கூறினர். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ