பைக் மீது பஸ் மோதல் வாலிபர் பலி
திண்டிவனம்: பைக் மீது பஸ் மோதிய தில் வாலிபர் இறந்தார்.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இளமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் மனோஜ் குமார், 25; பெரம்பலுார், சொக்க நாதபுரத்தை சேர்ந்தவர் சங்கமலை மகன் வினோத், 24; இருவரும் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து திட்டக்குடிக்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர்.அன்று இரவு 7:30 மணிக்கு திண்டிவனம் அடுத்த ஓங்கூர் பாலம் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ் மோதியது. அதில் படுகாயமடைந்த இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மனோஜ்குமார் இறந்தார்.விபத்து குறித்து ஒலக் கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.