உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக் திருடிய வாலிபருக்கு தர்மஅடி

பைக் திருடிய வாலிபருக்கு தர்மஅடி

விழுப்புரம்: பைக் திருடிய வாலிபரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம், வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன் மனைவி வனஜா,50; இவர்களின், பைக்கை வீட்டின் எதிரே பூட்டி நிறுத்தியிருந்தனர். அந்த வாகனத்தை நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, இருவர் திருட முயன்றனர். அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அதை கண்டுபிடித்து அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பித்து செல்ல, மற்றொருவரை பிடித்து தர்ம அடி கொடுத்து, விழுப்புரம் டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், விசாரணை செய்ததில், அவர் தஞ்சாவூர் மாவட்டம், கோடிக்கிளியை சேர்ந்த பாண்டியன் மகன் ரூபன்,19; என்பது தெரியவந்தது. தப்பியோடியவர் அதே மாவட்டம், செம்மங்குடியை சேர்ந்த சந்தோஷ்,20; என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து ரூபனை கைது செய்தனர். தப்பியோடிய சந்தோைஷ தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை