உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஒரு பகுதியில் 10 நாட்கள் இன்னொரு பகுதியில் 5 நாட்கள் விருதுநகரில் பாரபட்சமான குடிநீர் சப்ளை

ஒரு பகுதியில் 10 நாட்கள் இன்னொரு பகுதியில் 5 நாட்கள் விருதுநகரில் பாரபட்சமான குடிநீர் சப்ளை

விருதுநகர் : விருதுநகர் நகராட்சியில் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு 3 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை நல்ல சுவையான தாமிரபரணி குடிநீரும், மேற்கு பகுதியில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு உப்புத்தன்மையுள்ள குடிநீரை 8 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.விருதுநகர் நகராட்சி பகுதிக்கு ஆனைக்குட்டம்அணைப் பகுதியில் உள்ள 13 கிணறுகள் மூலம் தினசரி 25 லட்சம் லிட்டர் வரை குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பழைய தாமிபரணி குடிநீர் திட்டம் மூலம் 20 லட்சம் லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. கோடை காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் போது, காரிசேரி, ஒன்டிப்புலிநாயக்கனுார் பகுதியில் உள்ள கல்குவாரியில் இருந்து தினசரி 10 லட்சம் லிட்டர் வரை தண்ணீர் எடுக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.இந்நிலையில் அருப்புக்கோட்டை, சாத்துார், விருதுநகர் நகராட்சிகளுக்கு என ரூ.444 கோடியில் புதிய தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் 2021ல் துவங்கப்பட்டது. இதன் மூலம் தினசரி 50 லட்சம் லிட்டர் குடிநீர் விருதுநகருக்கு தனியாக வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.இந்தநிலையில் அத்திட்டத்தில் பிரதான குழாய் பதிக்கும் பணி ஓரளவு முடிந்துள்ளது. இதன் மூலம் கடந்த சில மாதங்களாக நகராட்சி பூங்கா அருகே உள்ள குடிநீர் தேக்கத் தொட்டிக்கு குடிநீர் வருகிறது. அந்தக் குடிநீரை, நகராட்சி நிர்வாகமானது, அனைத்து பகுதி மக்களுக்கும் சமமாக வழங்கவில்லை.மாறாக நகரின் கிழக்கு பகுதியில் உள்ள வார்டுகளுக்கு மட்டும் 3 முதல் 5 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது. அதிகமாக வரும் குடிநீரை பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லாமல் வீணாக வெளியேற்றி விடும் நிலையும் உள்ளது.அதே நேரம் நகரின் மேற்கு பகுதியில் உள்ள பெரும்பாலான வார்டுகளுக்கு ராமமூர்த்தி சாலை, மதுரை ரோடு, அகமது நகர் ஆகிய இடங்களில் உள்ள தொட்டிகளில் ஏற்றப்படும் உப்புத்தன்மையுள்ள ஆனைக்குட்டம் குடிநீரை 8 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே நகராட்சி நிர்வாகம் தற்போது வரை வழங்கி வருகிறது.எனவே நகராட்சி நிர்வாகத்தின் இந்த பாரபட்சமான அணுகுமுறையால் மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோடை என்பதால் குடிநீருக்காக திண்டாடுகின்றனர். அனைத்து வீடுகளுக்கும் மாதாந்திரகுடி நீர் கட்டணமாக ரூ.110 வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில், ஒரு பகுதிக்கு குறைந்த நாட்கள் இடைவெளியில் நல்ல குடிநீரும், மற்றொரு பகுதிக்குஉப்புத்தன்மையுள்ள குடிநீரை நீண்ட நாட்கள் இடைவெளியில் வழங்குவது ஏன் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை