உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அனுப்பன்குளத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்த நிலையில் கிணறு

அனுப்பன்குளத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்த நிலையில் கிணறு

சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஆண்டாள் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள திறந்த நிலை கிணற்றினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சி ஆண்டாள் நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியாருக்கு சொந்தமான கிணறு உள்ளது. மேலும் கிணற்றைச் சுற்றிலும் பட்டாசு கடைகளும் உள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் இருப்பதால் விற்பனைக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆனால் கிணறு திறந்த நிலையில் இருப்பதால் குடியிருப்புவாசிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். தவிர பட்டாசு கடைக்கு வரும் மக்களும் எதிர்பாராமல் தவறி விழ வாய்ப்புள்ளது. தெருவின் அருகே இருப்பதால் அனைவரும் இதனை கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது. குழந்தைகள், பெரியவர்கள் தடுமாறி விழவும் வாய்ப்பு உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் விபரீதம் அறியாமல் கிணற்றின் அருகே விளையாடுகின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்பு கிணற்றைச் சுற்றில் தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை