உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆஸ்பெட்டாஸ் சீட்டில் வி.ஏ.ஓ., அலுவலகம் வெயிலில் தவிக்கும் மக்கள்

ஆஸ்பெட்டாஸ் சீட்டில் வி.ஏ.ஓ., அலுவலகம் வெயிலில் தவிக்கும் மக்கள்

விருதுநகர்: விருதுநகரில் முத்துராமன்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் ஆஸ்பெட்டாஸ் சீட் போடப்பட்ட கட்டடத்தில் இயங்குவதால், தற்போது கொளுத்தும் வெயிலில் மக்கள் பரிதவிக்கும் சூழல் உள்ளது.விருதுநகர் - மதுரை ரோட்டில் ஜெயில் அருகே கோட்டைப்பட்டி, விருதுநகர் டவுன், முத்துராமன்பட்டி ஆகிய வி.ஏ.ஓ., அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட்டு வந்தன. இந்த மூன்று பகுதிகளுமே நகராட்சியையும், அதை யொட்டியுமே இருப்பதால் ஒரே இடத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தை எளிதில் பார்வையிட்டு மக்கள் வருவாய் தொடர்பான சான்று பெற முடிந்தது.இந்நிலையில் 2020 இறுதியில் மழைக்காலத்தில் இந்த வி.ஏ.ஓ., கட்டடங்களின் கூரையின் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து வி.ஏ.ஓ., அலுவலகங்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இடமாற்றம் செய்யப்பட்டன. கோட்டைப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகம் மாலை பேட்டை தெருவிலும், விருதுநகர் டவுன் அலுவலகம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியிலும், முத்துராமன்பட்டி அலுவலகம் அல்லம்பட்டியிலும் இடமாற்றம் ஆனது. இந்த மூன்று அலுவலங்களின் எல்லை மக்களுக்கு அடிக்கடி குழப்பத்தை ஏற்படுத்தும்.இதில் முத்துராமன்பட்டி அலுவலகம் ஆஸ்பெட்டாஸ் சீட் கூரை போடப்பட்ட கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதனால் வி.ஏ.ஓ., அலுவலகம் எப்போதும் அதிக வெப்பத்துடன் காணப்படுகிறது. தற்போது வெயில் கொளுத்துவதால் சான்று வாங்க வரும் மக்களும், அலுவலரும் அவதிப்படுகின்றனர். மழைக் காலங்களில் ஆவணங்கள் நனையவும் வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை