பா.ஜ. , நிர்வாகிகள் விலகல்
சிவகாசி, ஜூன் 12- விருதுநகர் மேற்கு மாவட்டத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் பா.ஜ., விலிருந்து விலகினர். பா.ஜ., விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் மகேஸ்வரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு அமைப்பாளர் ராஜேஸ்வரன், சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட செயலாளர் முருகேசன், சமூக ஊடகப்பிரிவு மாவட்டச் செயலாளர் சவரிமுத்து, திருத்தங்கல் நகர பொதுச்செயலாளர்கள் ரவிச்சந்திரன், தங்கமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களது பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் விலகிய கடிதத்தை மாவட்ட தலைவர் சரவண துரைராஜாவிடம் கொடுத்தனர். தொடர்ந்து அண்ணாமலையின் வீ த லீடர்ஸ் அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.