உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான் முதல்வன் திட்ட மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்துவதில் இழுபறி திணறும் கல்லுாரி நிர்வாகங்கள்

நான் முதல்வன் திட்ட மாணவர்களின் கல்விக்கட்டணத்தை செலுத்துவதில் இழுபறி திணறும் கல்லுாரி நிர்வாகங்கள்

அருப்புக்கோட்டை: தமிழக அரசு நான் முதல்வன் திட்டத்தில் மாவட்டத்தில் பிளஸ்2 முடித்த பின் உயர் கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிவதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆசிரியர்கள், தாசில்தார்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட, ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் உயர் கல்வி கற்காத மாணவர்களை கண்டறிந்து அவர்களை அந்தந்த ஊரில் உள்ள அரசு தனியார் கல்லுாரிகளில் சேர்க்கின்றனர். இவர்களுக்கான கல்வி செலவை மாவட்ட கல்வி அறக்கட்டளை ஏற்கும் என அறிக்கப்பட்டது. இதில் ஏற்கனவே, கல்லுாரிகள் துவங்கப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில், இந்த மாணவர்களை சேர்க்க தனியார் கல்லூரிகள் தயக்கம் காட்டுகிறது.வருவாய்த்துறையினரின் வற்புறுத்தால் மாணவர்களை கல்லுாரிகளில் சேர்க்கின்றனர். ஆனால் அந்த மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் செலுத்த எவ்வித முயற்சியும் வருவாய்த்துறையினர் எடுக்காததால் கல்லுாரிகள் நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !