உள்ளூர் செய்திகள்

பணிநிறைவு விழா

விருதுநகர், ஏப். 30 - விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மருந்து கிடங்கு அலுவலராக பணிபுரிபவர் அரசு. இவர் 1986ல் மருந்தாளுனராக பணியில் சேர்ந்து தொடர்ந்து 40 ஆண்டுகள் மருத்துவத்துறையில் பணிபுரிந்தார். இவர் இம்மாதத்துடன் பணிநிறைவு பெறுகிறார். இவருக்கான பணிநிறைவு பாராட்டு விழா டீன் ஜெயசிங் தலைமையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு, ஆர்.எம்.ஓ., வைஷ்ணவி முன்னிலையில் நடந்தது. இதில் உதவி ஆர்.எம்.ஓ., கார்த்திக், அறிவு, டாக்டர்கள், மருந்தாளுனர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் மாவட்டத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருந்தாளுனர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ