உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தி.மு.க., எம்.பி.க்கள், டில்லி சென்று கூச்சல் போட்டதை தவிர எதையும் சாதிக்கவில்லை

தி.மு.க., எம்.பி.க்கள், டில்லி சென்று கூச்சல் போட்டதை தவிர எதையும் சாதிக்கவில்லை

ராஜபாளையம் : நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வென்ற ஆணவத்தில் தி.மு.க., எம்.பி.க்கள், டில்லி சென்று கூச்சல் போட்டதை தவிர எதையும் சாதிக்க முடியவில்லை. ராஜபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் செயல் வீரர்கள் கூட்டம், உறுப்பினர் அட்டை வழங்குதல் நடந்தது.முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்து பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வென்ற அகம்பாவத்தில் தி.மு.க., எம்.பி.க்கள், டில்லி சென்று கூச்சல் போட்டதை தவிர எதையும் சாதிக்க முடியவில்லை.அ.தி.மு.க., பா.ஜ., வுக்கு அடிபணிந்து செல்கிறது என கூறும் தி.மு.க.,வினர் ஏன் டெல்லியில் போராடி நிதியை வாங்கித் தர முடியவில்லை. மின் கட்டணம், சொத்து வரி உயர்வு குறித்து காரணம் கேட்டால் மத்திய அரசு பணம் ஒதுக்கவில்லை என தி.மு.க., கூறுகிறது. எம்.எல்.ஏ., சொல்பவருக்கு மட்டும் தான் மண் பாஸ் என்றால் நாங்கள் வரும் தேர்தலில் அவரை தோற்கடிப்போம். மக்களது வரிப்பணம் தி.மு.க.,வைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றார்.மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், ஒன்றிய செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், நகர் செயலாளர்கள் துரை முருகேசன், பரமசிவம், அழகா புரியான், ஒன்றி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ