நுாலகங்களுக்கு புத்தகங்கள் நன்கொடை
விருதுநகர்; விருதுநகர் மாவட்டம் பொது நுாலகத்துறைக்கு ஓய்வு ஐ.ஏ.எஸ்., வை.பழனிச்சாமி, 500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்வு வத்திராயிருப்பு அருகே அகத்தாபட்டி ஊரக நுாலகத்தில் நடந்தது. இதில் மாவட்ட நுாலக அலுவலர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி பேசினார். நுாலகர் முருகன் வரவேற்றார். டாக்டர் பால்சாமி, அறிவொளி முருகன், பள்ளி நிர்வாகி பெரிய மகாலிங்கம், தொழிலதிபர் சுப்புராஜ் மாரியப்பன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் குரூப் 1,2, 4 ஆகிய மூன்றிலும் ஒரே முறையில் தேர்ச்சி பெற்ற போட்டித் தேர்வாளர் ப்ரீத்திக்குநுால் வழங்கி கவுரவிக்கப்பட்டது. 7 கிளை நுாலகங்களின் நுாலகர்களும் புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். ஆன்மிகம், கட்டுரை, இலக்கியம், தத்துவம், அறிவியல் உள்ளிட்ட வகைப்பாட்டில் உள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.