பரிசோதனை முகாம்
விருதுநகர், ஜூன் 15 - விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு மையத்தில் ஹீமோபிலியா இன்ஹிபிட்டர் பரிசோதனை முகாம் டீன் ஜெயசிங் தலைமையில் குழந்தைகள் நலத்துறை தலைவர் செந்தில்குமரன், துணை கண்காணிப்பாளர் அரவிந்த்பாபு முன்னிலையில் நடந்தது. இதில் 70 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு மூட்டு, தசை நலனை மேம்படுத்த பிசியோதெரபி கிட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திட்ட அதிகாரி ரோனிஷா உள்பட மருத்துவ குழுவினர் செய்திருந்தனர்.