உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான்கு வழிச்சாலை ஓரங்களில்குப்பை கொட்டினால் நடவடிக்கை நிர்வாக அதிகாரி அறிவிப்பு

நான்கு வழிச்சாலை ஓரங்களில்குப்பை கொட்டினால் நடவடிக்கை நிர்வாக அதிகாரி அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகர் - மாவட்டத்தில் மதுரை - விருதுநகர் - சாத்துார் வழியாக செல்லும் நான்குவழிச்சாலை ஓரங்களில் குப்பையை கொட்டி கிடங்காக மாற்றும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நான்கு வழிச்சாலை நிர்வாக அதிகாரி லோகநாதன் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:மாவட்டத்தில் மதுரை -விருதுநகர் - சாத்துார் வழியாக நான்கு வழிச்சாலை கன்னியாகுமரி வரை செல்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் முறையாக குப்பையை பிரித்து அகற்றகின்றன.ஆனால் நான்கு வழிச்சாலையில் உள்ள உள்ளாட்சிகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முறையாக குப்பையை அகற்றுவதில்லை. மேலும் இப்பகுதியில் உள்ள குடியிருப்போர் ரோட்டின் முனையில் உள்ள குப்பை தொட்டியில் குப்பையை கொட்டினாலும் சிலர் ரோட்டின் ஓரங்களில் கொட்டி குப்பை கிடங்காக மாற்றி வருகின்றனர்.இவர்களிடம் இருந்து வரி வாங்கும் உள்ளாட்சிகள் குப்பையை அகற்றும் மேலாண்மையை முறையாக கடைப்பிடிக்காததால் சுகாதார சீர்கேடு எழுந்துள்ளது. இதனால் நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் துார்நாற்றத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். மேலும் சிலர் குப்பை தொட்டிக்கு தீ வைத்து விடுவதால் அதிலிருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இது போன்று நான்கு வழிச்சாலை ஓரங்களை பாதிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே நான்கு வழிச்சாலை பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினர் முறையாக சுகாதார மேலாண்மையை கடைப்பிடிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ