பதவியேற்பு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. ரோட்டரி தலைவராக முத்துச்சாமி, செயலாளராக ராம்குமார், பொருளாளராக ஜெயகண்ணன் பதவி ஏற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன், எம்.எல்.ஏ. கார்த்திக், உதவி ஆளுநர் கிருஷ்ணவேணி, ரோட்டரி நிர்வாகிகள் பெரியசாமி, வெங்கடாசலம், லட்சுமணன், சார் பதிவாளர் முத்துசாமி, தாசில்தார் ராஜ்குமார் வாழ்த்து தெரிவித்தனர். சிறந்த சேவைக்காக டாக்டர்கள் காளிராஜ், நாராயணன், செவிலியர் அனிதா, ஓய்வு தலைமை ஆசிரியர் கருப்பசாமிக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.