உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தடுப்புகள் இன்றி நடக்கும் சுரங்கப்பாதை பணிகள் வாகன ஓட்டிகள் அச்சம்

தடுப்புகள் இன்றி நடக்கும் சுரங்கப்பாதை பணிகள் வாகன ஓட்டிகள் அச்சம்

விருதுநகர்: விருதுநகர் அருகே சண்முக சுந்தரபுரம் செல்லும் வழியில் நடக்கும் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளில் போதிய தடுப்புகள் இல்லாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.விருதுநகர் அருகே சண்முக சுந்தரபுரம் செல்ல ரயில்வே கேட் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த பகுதியில் மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளதை போல ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க சில மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இவ்வழியாக செல்லும் வாகனங்கள் ரோட்டின் ஓரத்தில் உள்ள குறுகலான பாதை வழியாக சென்று வருகின்றன.இந்நிலையில் சண்முக சுந்தரபுரத்தில் இருந்து நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விடாமல் இருக்க கம்பு மூலம் பக்கவாட்டில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் பள்ளம் இருப்பதை உணர்த்தும் வகையில் முறையான தடுப்பு எச்சரிக்கைகள் இல்லை.இதனால் இரவில் கவனக்குறைவுடன் வரும் வாகனங்கள் நேராக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. ரயில்வே கேட் மறுபுறம் பணிகள் நடக்கும் பகுதியில் வைக்கப்பட்டுள்ளதை போல நான்கு வழிச்சாலை நோக்கி நேராக வரும் வாகனங்களை தடுக்க தேவையான தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ