| ADDED : ஏப் 10, 2024 06:11 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்றுவட்டார கோயில்களில் பங்குனி மாதத்தை அடுத்து அம்மனுக்கு பொங்கல் பூக்குழி விழாக்கள் நடைபெற்று வருகின்றன.ராஜபாளையம், தளவாய்புரம் மாஞ்சோலை, செட்டியார் பட்டி, முகவூர், சத்திரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பங்குனியை முன்னிட்டு பொங்கல் திருவிழா பூக்குழி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.செட்டியார்பட்டி பத்திரகாளியம்மன் கோயில், கொம்மந்தாபுரம் பத்ரகாளியம்மன் கோயில், முகவூர் தெற்கு தெரு மாரியம்மன் கோயில், தளவாய்புரம் மாஞ்சோலை காலனி மாரியம்மன் வடகாசி அம்மன் கோயில்களில் பொங்கல் விழாவில் அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை, முளைப்பாரி, பூப்பெட்டி ஊர்வலம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தினமும் அம்மன் வீதி உலா நடந்தது.இன்று அதிகாலை முதல் ஒவ்வொரு பகுதி கோயில்களிலும் பூக்குழி விழா நடைபெறுகிறது. காப்பு கட்டிய பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர்.கடந்த ஒரு வாரமாக கிராமப் பகுதி முழுவதும் விழாக்கோலத்துடன் காணப்பட்டு இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா உடன் முடிவு பெறுகிறது.