உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மண் திருட்டை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு

மண் திருட்டை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு

ராஜபாளையம்: தென்காசி மாவட்டத்திலிருந்து ராஜபாளையம் வழியே மண் திருட்டு நடைபெறுவது சம்பந்தமாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டதை அடுத்து சிவகாசி ஆர்.டி.ஓ., விஸ்வநாதன் நான்கு கண்காணிப்பு குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.தினமலர் நாளிதழில் தென்காசி மாவட்டத்திலிருந்து டிப்பர் லாரிகள் மூலம் தொடர் சட்டவிரோத மண் திருட்டு நடைபெறுவது குறித்து செய்தி வெளியிட்டிருந்தோம்.தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் விடுவதும், போலீசார், வருவாய்துறை சாமானியர்களிடம் மட்டும் அதிகாரத்தை காட்டி வருவது பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. செய்தி எதிரொலியாக மணல் மற்றும் இதர கனிமங்கள் சட்ட விரோத கடத்தலை தடுக்க ஆர்.ஐ., வி.ஏ.ஓ., என நான்கு சிறப்பு குழுவை அமைத்து ஏப். 30 வரை கண்காணிக்க ஆர்.டி.ஓ., விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்