மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
5 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
5 hour(s) ago
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தாலுகா கூமாபட்டியில் இருந்து பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்லும் வழியில் பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ரோடு போடப்படாததால் விவசாயிகள், மலைவாழ் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிழவன் கோயிலில் இருந்து பெரியாறு அணைக்கு செல்லும் ரோட்டில் 2 இடங்களில் தரைப்பாலங்கள் இருந்தது. மழைக்காலங்களில் அதிக நீர்வரத்து ஏற்பட்டால் பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை இருந்து வந்தது. இந்நிலையில் இரண்டு தரைப்பாலங்களும், மேம்பாலங்களாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.ஆனால், கிழவன் கோயிலில் இருந்து பெரியாறு அணைக்கும், கோவிலாறு அணைக்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளாக போடப்படாமல் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.இதனை காரணம் காட்டி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து மக்கள் செல்கின்றனர். அதே நேரம் விவசாய நிலங்களுக்கு விளை பொருட்களைக் கொண்டு செல்வதில் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பட்டுபூச்சி என்ற இடத்தில் வசிக்கும் மக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, பெரியாறு, கோவிலாறு அணைகளுக்கு செல்லும் ரோட்டினை விரைந்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
5 hour(s) ago
5 hour(s) ago