| ADDED : ஏப் 01, 2024 06:35 AM
விருதுநகர்: தமிழகத்திலேயே அதிக ஒட்டுக்கள் பெற்ற தொகுதியாக விருதுநகர் தொகுதி இருக்க வேண்டும் என அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.விருதுநகரில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு இண்டியா கூட்டணி கட்சிகளுக்கான விருதுநகர் சட்டசபை தொகுதி அலுவலகம் திறப்பு விழா, நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ., சீனிவாசன் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் பேசியதாவது:இண்டியா கூட்டணி கட்சி தலைவர்களை நாம் ஒழுங்காக பயன்படுத்தி கொண்டால் ஆங்காங்கே கிடைக்கும் ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் முழுவதுமாக கிடைக்கும். காங்., தானே நிற்கிறது, நாம் தானே பெரிய கட்சி என தி.மு.க.,வினர் இருந்தால் ஓட்டுக்கள் சிதறிவிடும். பெரியது, சிறியது என நினைக்காமல் கூட்டணி கட்சியினர் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். தமிழகத்திலேயே அதிக ஓட்டுக்கள் பெற்ற தொகுதியாக விருதுநகர் தொகுதி இருக்க வேண்டும். காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார், என்றார்.