உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குளு குளு சூழலை ஏற்படுத்தும் 100 ஆண்டு மரங்கள்

குளு குளு சூழலை ஏற்படுத்தும் 100 ஆண்டு மரங்கள்

சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பும் மழைக்கு ஆதாரமாகவும் மரங்கள் உள்ளன. இவற்றை பராமரிப்பது அவசியம். மரங்களை வெட்டினால் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் நாம் மரங்களை வெட்டி சாய்க்கிறோம். அவற்றை வளர்ப்பதும் இல்லை. பாதுகாப்பதும் இல்லை. மரங்களை அழிப்பதால் பூமிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகில் முன்பு 50 சதவீத காடுகள் இருந்தது. தற்போது 30 சதவீதம் தான் உள்ளது. அந்தளவிற்கு மரங்களை வெட்டி சாய்த்து விட்டோம். ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகளை நட்டு விளம்பரம் செய்வதை விட்டு 100 மரங்களை நட்டு, அவைகள் தானாக வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றி பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டி - ராமலிங்கா மில் சந்திப்பு வரையுள்ள திருச்சுழி ரோட்டின் இருபுறமும் 100 ஆண்டுகளுக்கு முன்பே மரங்களை நட்டு பராமரித்து வந்துள்ளதால், பல ஆண்டுகளாக மரங்கள் குளு குளு சூழலை ஏற்படுத்தியதுள்ளது. அடர்த்தியாக உள்ளதால் பல்வேறு இன பறவைகள் பல ஆண்டுகளாக கூடு கட்டி வாழ்கின்றன. இந்த பகுதியில் உள்ள நூற்பு ஆலைக்கு தொழிலாளர்கள் பசுமை சூழலை ரசித்தபடி வேலைக்கு நடந்து செல்கின்றனர். வாக்கிங் செல்பவர்களுக்கும் இந்த சூழல் நடப்பதற்கு புத்துணர்ச்சியும், சுத்தமான காற்றும் கிடைக்கிறது. இதே போன்று நகரில் உள்ள ரோடு ஓரங்களில் மரங்களை நட்டு பராமரிக்க நெடுஞ்சாலை துறை, நகராட்சி முனைப்பு காட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை