உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  260 சேலைகள் பறிமுதல்

 260 சேலைகள் பறிமுதல்

சாத்துார்: சாத்துார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட முறம்பு கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு 7:00 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சங்கரன்கோவிலில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆவணமின்றி 260 சேலைகளை அருப்புக் கோட்டையை சேர்ந்த மகேந்திரன், 35. கொண்டு வந்தது தெரிய வந்தது.இதன் மதிப்பு ரூ.1.32 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள் சாத்துார் தாசில்தார் வடிவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ