உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஏஜன்ட் கடத்தல் ஆசிரியர் உட்பட 3 பேர் கைது

பட்டாசு ஏஜன்ட் கடத்தல் ஆசிரியர் உட்பட 3 பேர் கைது

சிவகாசி:விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ரூ.7 லட்சத்தை தராத பட்டாசு ஏஜன்ட் பாண்டீஸ்வரனை 45, கடத்திய அரசு பள்ளி ஆசிரியர் சுப்புராஜ் 41, விஜய் 26, பாலமுருகன் 42, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.சாத்துார் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் சுப்புராஜ். இவர் நாரணாபுரம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். முருகானந்தம் என்பவருடன் சேர்ந்து சிவகாசி அருகே மீனம்பட்டி ரத்தினபுரி நகரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சிவகாசி ஆவணி நாடார் தெருவை சேர்ந்த பட்டாசு ஏஜன்ட் பாண்டீஸ்வரன் ரூ.7 லட்சத்திற்கு பட்டாசு வாங்கினார். ஆனால் அதற்குரிய பணத்தை தராமல் காலம் தாழ்த்தியுள்ளார்.நேற்று பாண்டீஸ்வரன் கொங்கலாபுரத்தில் உள்ள ஒரு பட்டாசு கடையில் நின்றிருந்த போது, அங்கு காரில் வந்த சுப்புராஜ் தனது உறவினர்கள் சுந்தர குடும்பன்பட்டியை சேர்ந்த விஜய், திருவிடந்தான் புரத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகியோருடன் பாண்டீஸ்வரனை கடத்தி சென்றார்.சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையிலான போலீசார், விரட்டிச் சென்று கோணம் பட்டி விலக்கு அருகே காரை மடக்கி பிடித்து பாண்டீஸ்வரனை மீட்டனர். சுப்புராஜ், விஜய், பாலமுருகனை கைது செய்தனர். பட்டாசு வாங்கி விட்டு பணம் தராமல் ஏமாற்றியதாக முருகானந்தம் அளித்த புகாரில் பாண்டீஸ்வரனையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை