உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேசிய நெடுஞ்சாலை வளைவில் கனரக வாகனங்களால் விபத்து

தேசிய நெடுஞ்சாலை வளைவில் கனரக வாகனங்களால் விபத்து

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் தேசிய நெடுஞ்சாலை வளைவு பகுதிகளில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் வரும்போது போக்குவரத்து நெருக்கடியும், விபத்து அபாயமும் காணப்படுகிறது.ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார், கிருஷ்ணன் கோவில் வழியாக மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை நகரின் மையப்பகுதி வழியாக செல்கிறது. இதனால் தினமும் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அழகாபுரியில் இருந்து கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக ராஜபாளையம் வரை தேசிய நெடுஞ்சாலையின் பல இடங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக ரோடு வளைவு பகுதியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் உள்ளது.எனவே, தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும் பாதுகாப்பின்றி நிறுத்தப்படும் கனரக வாகனங்களை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை