பதிவுச்சான்று பெறாமல் இயங்கும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் புவியியல், சுரங்கத்துறை பதிவு சான்று பெறாமல் இயங்கும் நாட்டு, சேம்பர் செங்கல் சூளைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு: சேம்பர், நாட்டு சூளைகள் பதிவு பெற கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல், சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரம் பெற்று நாட்டு செங்கல் சூளை பதிவு கட்டணம் ரூ.300, சேம்பர் பதிவு கட்டணம் ரூ.3000, சேம்பர், நாட்டு செங்கல்சூளை விண்ணப்பக் கட்டணம் ரூ.1500, மண்ணுக்குரிய ஆண்டு கனிம கட்டணம் நாட்டு செங்கல்சூளைக்கு 1 முதல்14 அடுப்புகள் வரை ரூ.10 ஆயிரம், 15 அடுப்புகளுக்கு மேல் ரூ.12 ஆயிரம, சேம்பர் செங்கல் சூளைக்கு 1 முதல் 16 அடுப்புகளுக்கு ரூ. 60 ஆயிரம், 17 முதல் 26 அடுப்புகளுக்கு ரூ.75 ஆயிரம், 27அடுப்புகளுக்கு மேல் ரூ.90 ஆயிரம் அரசுக்கு செலுத்த வேண்டும்.நடப்பாண்டில் ஸ்ரீவில்லிபுத்துாரில் வெங்கடேஸ்வரபுரம், சிங்கம்மாள்புரத்தில் 8 நாட்டு செங்கல் சூளைகள் மட்டுமே முறையாக பதிவு சான்று பெற்றுள்ளனர். ் மாவட்டத்தில் செங்கல் சூளை பதிவு சான்று பெறாமல் இயங்கி வரும் நாட்டு, சேம்பர் செங்கல்சூளை உடனடியாக உதவி இயக்குநர் அலுவலத்தை அணுகி உடனடியாக பதிவு சான்றிதழ் பெற வேண்டும், என்றார்.