உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாவட்டத்தில் சிவகாசி,சாத்துார் விருதுநகர், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன. தவிர 2000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்குகின்றன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உரிமம் பெற்று வைத்துஇருக்கும் பட்டாசு கடை அருகே சிலர் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளிலும், காட்டுப்பகுதிகளிலும் தகர செட் அமைத்தும், குடோனை வாடகைக்கு எடுத்தும் சட்டவிரோதமாக சிலர் பட்டாசு தயாரிக்கின்றனர். இதுபோன்று சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும்பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஊதியம் அதிகம் என்பதால் தவறு என தெரிந்தும்பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால்அரசு நிவாரணம் கிடைப்பதிலும் சிரமம் ஏற்படுகின்றது.சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பதற்கு தொழிலாளர்கள் சென்று விடுவதால் முறையாக அனுமதி பெற்று இயங்கும் பட்டாசு ஆலைகளுக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் பட்டாசு தொழிலாளர்களின் பலர் வேறு வேலைக்கு சென்றதால் இயல்பாகவே பட்டாசு உற்பத்தி பணிக்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் இது போன்று சட்டவிரோத தயாரிப்புக்கு போவதால் மேலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பட்டாசு தயாரிப்புக்காக ஆலை உரிமையாளர்கள் தினமும் தொழிலாளர்களை தேடும் நிலை ஏற்படுகிறது. எனவே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை