உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அ.தி.மு.க. திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தி.மு.க.,

அ.தி.மு.க. திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தி.மு.க.,

சிவகாசி; சிவகாசி அருகே லட்சுமியாபுரத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி செயலாளர்கள் நியமனம் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது, சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்காக மத்திய அரசிடம் அனுமதி பெற்று, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, அதற்குரிய நிதி ஒதுக்கி, நிலங்கள் கையகப்படுத்தி பாலங்கள் அமைக்க அரசாணை பெற்றது அ.தி.மு.க.,ஆட்சியில். ஆனால் மேம்பால திட்டத்தை நிறைவேற்ற விடாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து கால தாமதப்படுத்தியவர்கள் தற்போது மேம்பால திட்டத்தை தாங்களே கொண்டு வந்தவர்கள் போல் நடிக்கின்றனர்.தி.மு.க., ஆட்சியில் அனைத்து விலைவாசிகளும் உயர்ந்து விட்டன. ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் மக்களுக்கு வழங்கப்படாமல் கள்ள மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிவகாசி சுற்றுச்சாலை திட்டத்தை காலதாமதப்படுத்தி தற்போது தான் அதற்குரிய வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியை தி.மு.க., ஆட்சி செய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தன்னிச்சையான திட்டங்கள் எதுவுமே செயல்படுத்தவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை