உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இரு ஆண்டுகளில் 15 குழந்தை, 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்பு தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

இரு ஆண்டுகளில் 15 குழந்தை, 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்பு தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 2023 ஏப். 1 முதல் 2025 மே 31 வரை 15 குழந்தை தொழிலாளர், 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என தொழிலாளர் உதவி ஆணையர் ஆனந்தி தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு: சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்று (ஜூன் 12) அனுசரிக்கப்படுகிறது. மேலும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணிகளிலும், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது.விருதுநகர் மாவட்டத்தில் 2023 ஏப். 1 முதல் 2025 மே 31 வரை 15 குழந்தை தொழிலாளர், 95 வளரிளம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.குழந்தை, வளரிளம் பருவத் தொழிலாளர் யாராவது பணியமர்த்தப்பட்டால் 1098 என்ற எண்ணிற்கும், https://pencil.gov.in/Users/login என்ற இணையத்திலும் புகார் தெரிவிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ