மேலும் செய்திகள்
மனைவி மாயம் : கணவர் புகார்
03-Jun-2025
சிவகாசி: சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியில் தம்பதி மீது தாக்குதல் நடத்திய போலீஸ்காரர் உட்பட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.சிவகாசி அருகே ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி 50. இவரது வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த முருகன் 35, என்பவர் நின்று கொண்டிருந்தார். ஏன் என் வீட்டின் அருகே நிற்கிறீர்கள் எனக் கேட்ட முத்துலட்சுமியையும் அவரது கணவர் ராமமூர்த்தி, மகள் சசிகலாவை முருகன் தாக்கினார். தொடர்ந்து முருகனின் சகோதரியின் கணவர் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் விஜயன் அங்கு வந்து முத்துலட்சுமியையும் அவரது கணவரையும் தாக்கினார். முத்துலட்சுமி, ராமமூர்த்தி ஆகியோர் முருகனின் தாயார் விஜயாவை தாக்கினர். கிழக்கு போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
03-Jun-2025