மேலும் செய்திகள்
அலட்சியத்தால் வீணாகும் ரூ.5.9 கோடி பஸ் ஸ்டாண்ட்
11-Sep-2025
சிவகாசி: பட்டாசு பார்சல்களை வெளி மாவட்டங்களுக்கு ஆம்னி, பயணிகள் பஸ்களில் அனுப்பப்படுவதை தவிர்க்க வேண்டும். இதனால் அசம்பாவிதம் ஏற்படுவது தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்று பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் உள்ளன 4000 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் செயல்படுகின்றன. தீபாவளிக்கு இன்னும் 27 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேரடியாக இங்கு வந்து பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர். வர முடியாதவர்கள் அலைபேசி மூலமாக தகவல் கொடுத்து பார்சல் மூலம் பெறுகின்றனர். இவ்வாறு வெளி மாவட்டங்களிலிருந்து பெறப்படும் ஆர்டர்களுக்கு பட்டாசுகள் பார்சல் சர்வீஸ் மூலம் பாதுகாப்பாக அனுப்பப்படும். ஆனால் தற்போது ஒரு சிலர் பட்டாசு பார்சல்களை பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆம்னி , பஸ்களில் அனுப்பி வைக்கின்றனர். இதில் வாடகை குறைவு. பஸ்களில் பட்டாசு பார்சல் அனுப்புவது மிகப்பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்தி விடும். சிறிது கவனக்குறைவு என்றாலும் பட்டாசு வெடித்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கிருந்து அனுப்பப்படும் பட்டாசு பார்சல்களை உரிய பார்சல் சர்வீஸ் மூலம் பாதுகாப்பாக மட்டுமே அனுப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
11-Sep-2025