உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சதுரகிரி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு பங்கேற்ற அதிகாரிகளுக்கு விருது

சதுரகிரி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு பங்கேற்ற அதிகாரிகளுக்கு விருது

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலை அடிவாரப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த வத்திராயிருப்பு அதிகாரிகளுக்கு சுதந்திர தின விழாவில் விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அடிப்படை வசதிகள் செய்யும் பொருட்டு ஆக்கிரமிப்பு நிலம் 8 ஏக்கர் மீட்கப்பட்டது. அங்கு பக்தர்களின் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டது. இதனால் இந்த ஆண்டு பக்தர்கள் சிரமம் இன்றி மலையேறி சுவாமி தரிசனம் செய்து திரும்பினர். இப்பணியில் ஈடுபட்ட தாசில்தார் ஆண்டாள், பி.டி.ஓ.க்கள் ராமமூர்த்தி, லலிதா, உதவி பொறியாளர் கதிரேசன், வருவாய் ஆய்வாளர் சுந்தர்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், முதல் நிலை காவலர் வைரமுத்து ஆகியோருக்கு நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சுகபுத்திரா விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை