மேலும் செய்திகள்
இலவச கண் சிகிச்சை முகாம்
17-Jul-2025
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சர்வதேச நீதிக்கான உலக தினத்தை முன்னிட்டு கோர்ட்டுக்கு வந்த மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அருப்புக்கோட்டை கூடுதல் மாவட்ட நீதிபதி வசந்தகுமார் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி சதீஷ், குற்றவியல் நீதிபதி ஜெயப்பிரதா, அருப்புக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதி ஆனந்தவள்ளி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி மற்றும் வக்கீல்கள் சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் லாவண்யா, சமரச மைய தீர்வர்கள் பாலசுப்பிரமணியன், பாலமுருகன், ஹேமலதா, வக்கீல்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
17-Jul-2025