உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  விழிப்புணர்வு  பயணம்

 விழிப்புணர்வு  பயணம்

விருதுநகர்: விருதுநகரில் அனைத்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோட்டை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு வாகன பயணம் செய்த விவசாயிகள் நேற்று விருதுநகர் வந்தனர். அவர்களுக்கு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யவும், இயற்கை உரம் தயாரிப்புக் குழு, விவசாய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி குழு, இயற்கை வேளாண் பயிற்சி குழு ஆகியவற்றை அரசே ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச. 28ல் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை தஞ்சாவூரில் துவக்கினர். இவர்கள் இன்று துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் சென்று தங்களது விழிப்புணர்வு பயணத்தை முடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை