உள்ளூர் செய்திகள்

 விழிப்புணர்வு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய சமரச தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி சதீஷ், அருப்புக்கோட்டை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவல்லி, குற்றவியல் நீதிபதி ஜெயப்பிரதா,கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி ஆகியோர் மக்களுக்கு சமரச விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். துணை சமரச மையத்தின் சமரசர்கள் பாலசுப்பிரமணியன், முத்துராஜன், கந்தசாமி, பாலமுருகன், ஹேமலதா, வக்கீல் சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் லாவண்யா, மூத்த வக்கீல்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !