விழிப்புணர்வு
விருதுநகர்: விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் ஏ.டி.எஸ்.பி., கருப்பையா தலைமை வகித்து இணையவழி குற்றங்கள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள், கல்வி முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார். இதில் பள்ளி தலைமையாசிரியர் காளிராஜன், ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்.ஐ., ராஜேஸ்வரி, எஸ்.எஸ்.ஐ., தங்கபாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.