உள்ளூர் செய்திகள்

பா.ஜ., ஆர்ப்பாட்டம்

காரியாபட்டி: திருப்பரங்குன்றம் தீபத்தூனில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், அதனை நிறைவேற்றாமல் அவமதிப்பு செய்த த.வெ.க., அரசை கண்டித்து காரியாபட்டியில் பா.ஜ.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். பொது செயலர்கள் கார்திகைவேல், வீரபத்திரன் அணி பிரிவு நிர்வாகிகள் ராமலிங்கம், பாலமுருகன் கோதண்டம், சாரதா, முனீஸ்வரன், விக்னேஷ், இளவரசன், மீனாட்சி, வெள்ளைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !