விருது பெற அழைப்பு
விருதுநகர்:கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: விளையாட்டு விருதுக்கு ரூ.10 ஆயிரத்து-க்கு மிகாமல் ஒரு தங்கப் பதக்கமும், ஒரு பாராட்டுச் சான்றும் வழங்கப்படுகிறது. விருது வழுங்குவதற்கு முந்தைய இரண்டு வருட செயல்பாடுகள் கணக்கில் ஏடுத்துக் கொள்ளப்படும்.2022--23 ஆண்டிற்கான (காலம் -2019 ஏப். 1 முதல் 2022 மார்ச் 31 வரை) 2023-24 ஆண்டிற்கான (காலம் -2020 ஏப். 1 முதல் 2023 மார்ச் 31) முதல்வர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குநர், உடற்கல்வி ஆசிரியர், விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நடத்துநர், ஒரு நிர்வாகி, ஒரு ஆதரவளிக்கும் நிறுவனம், ஒரு நன்கொடையாளர், ஒரு ஆட்ட நடுவர், நடுவர், நீதிபதி ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, என்றார்.