சி.பி.எஸ்.இ., சிலம்பப் போட்டி
மதுரை; மதுரை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான சிலம்பப் போட்டி டாக் பள்ளியில் நடந்தது. இதில் மதுரை கிருஷ்ணம்மாள் ராம சுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பரிசுகளை வென்றனர். 12 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவு இரட்டைக் கம்பு வீச்சில் 7ம் வகுப்பு மாணவி சதானா ஸ்ரீ 2ம் பரிசு, 14 வயது இரட்டைக்கம்பு வீச்சில் 7 ம் வகுப்பு சர்மிளா 3ம் பரிசு பெற்றனர். 17 வயது ஒற்றைக் கம்பு வீச்சில் 9ம் வகுப்பு மிருணாலிகா சவுக்கி முதல் பரிசு, 19 வயது இரட்டைக் கம்பு வீச்சில் பிளஸ் 1 மாணவி விஜயதர்ஷினி முதல் பரிசு, ஒற்றைக் கம்பு வீச்சில் பிளஸ் 2 மாணவி சிவதர்சினி 3ம் பரிசு பெற்றனர். 14 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் பிரிவு இரட்டைக் கம்பு வீச்சில் 7ம் வகுப்பு ஹர்ஷவர்தன், 17 வயது இரட்டைக்கம்பு வீச்சில் சித்தார்த், தொடுமுறை பிரிவில் பத்தாம் வகுப்பு கிருத்திக் 3ம் பரிசு பெற்றனர். 19 வயது தொடுமுறை பிரிவில் பிளஸ் 2 மாணவர் சூர்யநாராயணன் முதல் பரிசு பெற்றார். மாணவர்களை முதல்வர் சூரியபிரபா, உடற்கல்வி ஆசிரியர் சக்தி பிரகாஷ் வாழ்த்தினர்.