ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் கலெக்டர் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கலெக்டர் ஜெயசீலன்திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது இரவு பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள் வருகை குறித்தும், மருத்துவமனை செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். அரசின் மருத்துவ சேவைகளை உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு தாமதமின்றி வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.பின்னர் அவசர சிகிச்சை, பச்சிளம் குழந்தை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டு அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.