கட்டுமான தொழிலாளர் திறன் பயிற்சி
விருதுநகர்: விருதுநகரில் தொழிலாளர் திறன் மேம்பாட்டு துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி நடந்தது. கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்து துவங்கி வைத்தார். முதற்கட்டமாக 20 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் வாரியத்தில் பதிவு பெற்ற 11 வகை கட்டுமான தொழில்களுக்கு 7 நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊதியத்துடன் சான்று வழங்கப்படும். தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் திறன் பயிற்சிக்கான விண்ணப்பத்தைபெற்று நலவாரிய அட்டை நகல், வங்கி கணக்கு முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்பதிவு செய்யலாம்.