உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம்

விருதுநகர்: விருதுநகரில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் இணை ஒருங்கிணைப்பாளர் முகமது ஆசிக் தலைமையில் நடந்தது. இதில் டூவீலர் பிரசார ஆய்வு, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இணை ஒருங்கிணைப்பாளர்கள் முனியாண்டி, பிரெடெரிக் எங்கெல்ஸ், ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேஸ்வரன், ஓய்வுபெற்றோர் அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில ஆலோசகர் கண்ணன், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் பாதுகாப்பு பேரவை சேகரன், ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், நிதி காப்பாளர் ஜான் லியோ சகாயராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை