நுகர்வோர் மன்றம் துவக்க விழா
சிவகாசி: திருத்தங்கல் எஸ்.என்.ஜி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துார் திரு இருதய பெண்கள்மேல்நிலைப்பள்ளி தாளாளர் லில்லி ஜெயரீட்டா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் லுார்து மேரி வரவேற்றார். மாணவிகளின் நுகர்வோர் விழிப்புணர்வு பாடல் பாடப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநில தலைவர் சுப்பிரமணியம், ஸ்ரீவில்லிபுத்துார் வட்ட வழங்கல் அலுவலர் அப்பாத்துரை பேசினர். ஆசிரியர் எட்வின் மேரி நன்றி கூறினார்.