கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: கூட்டுறவு வங்கி ஊழியர்களை தரக்குறைவாக பேசிய விவசாய சங்க நிர்வாகியை கண்டித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பி.கண்ணன், கே.கண்ணன், தங்கப்பாண்டி, வேலாயுதம் ஆகியோர் பேசினர்.