வாறுகாலில் குடிநீர் குழாய் கழிவுநீர் கலக்கும் அபாயம்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மலைப்பட்டி ஊராட்சி மெயின் ரோட்டில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. தொட்டியில் இருந்து பகிர்மான குழாய்கள் ரோட்டை கடந்து குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது. குழாயின் ஒரு பகுதி ரோட்டின் அருகில் உள்ள வாறுகாலின் வழியாக செல்கிறது. இந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்கி பகிர்மான குழாய் அதில் மூழ்கியுள்ளது. குழாய் ஏற்கனவே துருப்பிடித்த நிலையில் சில நாட்களில் ஓட்டை விழுந்து கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. இதனால் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதில் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டுகிறது. வாறுகால் இல்லாத பகுதிகளில் குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.