உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் அனுமதியின்றி கட்டிய 27 கட்டடங்களை சீல் வைக்க முடிவு

சிவகாசியில் அனுமதியின்றி கட்டிய 27 கட்டடங்களை சீல் வைக்க முடிவு

சிவகாசி:-சிவகாசி மாநகராட்சியில் நகரமைப்பு அனுமதி பெறாமல் கட்டிய 27 கட்டடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைக்க முடிவு செய்துள்ளனர். சிவகாசியில் கடந்த இரு ஆண்டுகளில் நகரமைப்பு அனுமதி பெறாமல் மாநகராட்சிக்கு வரி செலுத்தாமல் கட்டப்பட்ட வீடுகள், வணிக வளாகங்கள் உட்பட 27 கட்டடங்கள் கண்டறியப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சரவணன், நகர திட்டமிடுநர் மதியழகன், உட்பட அதிகாரிகள் நேற்று பி.கே.எஸ்.ஆறுமுகம் ரோடு, பெரியகுளம் கண்மாய் கரை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 வணிக வளாகங்களை காலி செய்ய சம்பந்தபட்ட கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டினர். கமிஷனர் கூறுகையில், நோட்டீஸ் ஒட்டப்பட்ட கட்டடங்களை சீல் வைக்கவும், தொடர்ந்து மாநகராட்சி ஒப்புதல் இன்றி கட்டப்பட்ட அனைத்து வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கி சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி