மேலும் செய்திகள்
கந்தசுவாமி கோவிலில் மறு ஏலம் அறிவிப்பு
05-Jun-2025
விருதுநகர்: விருதுநகர், துாத்துக்குடிமாவட்ட காரீப் பருவ விவசாயிகள், விதை விற்பனை உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே விதைகளை வாங்க வேண்டும் என விருதுநகர் விதை ஆய்வு துணை இயக்குநர் வளர்மதி தெரிவித்தார்.அவரது செய்திக்குறிப்பு: தற்போது மக்காச்சோளம், பருத்தி பயிரிடும்விவசாயிகள் தமிழக அரசின் உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். விதைச் சட்டத்தில் உள்ள 14 காரணிகளும் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதா என உறுதி செய்து வாங்க வேண்டும்.விதைப் பையில் உள்ள விபர அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பயிர், ரகம், காலாவதி நாள், குவியல் எண், அவரவர் பகுதிக்கு ஏற்றவையா என்பதை ஆய்வு செய்து வாங்க வேண்டும். ரசீதில் விதையின் ரகம், குவியல் எண், காலாவதி நாள் குறிப்பிடப்பட்டுள்ளதா என கண்காணித்து வாங்க வேண்டும்.உரிமம், ரசீதின்றி விதைகளை விற்பனை செய்தாலோ, போலி விதைகளை விற்பனை செய்தாலோ, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.பழக்கன்று, தென்னை, நாற்றுகள் விற்பனை செய்யும் நர்சரி உரிமையாளர்களும் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும். உரிமம் இல்லாத விதை விற்பனை, நர்சரி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு தெரிவித்தார்.
05-Jun-2025