உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காட்சிப்பொருளான குளியல் தொட்டி

காட்சிப்பொருளான குளியல் தொட்டி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையை அருகே மலை பட்டியில் ரூ. 3.50 லட்சத்தில் கட்டப்பட்ட குளியல் தொட்டி மக்களுக்கு பயன்படாமல் காட்சி பொருளாக உள்ளது. அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மலைபட்டி ஊராட்சி . இங்கு உள்ள ஆதி திராவிடர் காலனியில் 3.50 லட்சம் நிதியில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. தொட்டி பயன்பாட்டிற்கு வந்த சில மணி நேரத்திலேயே மோட்டார் பழுதானது. மோட்டாரை இயக்கினால் தண்ணீர் வருவது இல்லை. காற்றுதான் வருகிறது என மக்கள் புலம்புகின்றனர். லட்சக்கணக்கில் செலவழித்தும் மக்களுக்கு பயன்பாடு இல்லாமல் குளியல் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. கடமைக்கு நிதியை ஒதுக்கி குளியல் தொட்டியை கட்டி மக்களுக்கு பயன்படாமல் காட்சி பொருளாக வைத்துள்ளனர். இதனால் மக்கள் குளியல் தொட்டி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை