உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் தி.மு.க.,வினர் வாக்குவாதம் கையெழுத்திடாமல் வெளிநடப்பு

மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் தி.மு.க.,வினர் வாக்குவாதம் கையெழுத்திடாமல் வெளிநடப்பு

விருதுநகர், : விருதுநகர் மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள், தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீர்மானத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.விருதுநகர் மாவட்ட ஊராட்சியில் அ.தி.மு.க.வை சேர்ந்த வசந்தி தலைவராக உள்ளார், இவருக்கும் கவுன்சிலர்கள் இடையே நடந்து வந்த மோதல் போக்கால் இதுவரை 3 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தி.மு.க.,விற்கு மாறி உள்ளனர். இதனால் 12 ஆக இருந்த அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. தி.மு.க., கவுன்சிலர்கள் எண்ணிக்கை 7ல் இருந்து 10 ஆக உயர்ந்துள்ளது.நேற்று நடந்த மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் தலைவர் வசந்தி தலைமை வகித்தார். துணை தலைவர் சுபாஷினி முன்னிலை வகித்தார். அலுவலக நிர்வாக செலவு தொடர்பாக தீர்மானம் அறிவிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளிகளுக்கு இருக்கை வசதி தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற கோரி அனைத்து மாவட்ட கவுன்சிலர்களும் கோஷமிட்டனர்.தி.மு.க., கவுன்சிலர்கள் 10 பேரும் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் புறக்கணித்ததோடு, தலைவரை ராஜினாமா செய்ய கோரி கோஷமிட்டனர். அ.தி.மு.க., கவுன்சிலர்களில் தலைவர், துணை தலைவர் போக மீதமுள்ள 7 பேர் தலைவர் போக்கு பிடிக்கவில்லை என்றாலும், கட்சி கட்டுபாட்டிற்காக கையெழுத்திட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ