காரியாபட்டியில் நாய்கள் தொல்லை: மக்கள் அச்சம்
காரியாபட்டி, : காரியாபட்டியில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். காரியாபட்டியில் ஏராளமான நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. போதிய உணவு கிடைக்காததால் கோழி கழிவுகள், குப்பை கிடங்குகளில் உள்ள கழிவுகளை உண்கின்றன. 15, 20 நாய்கள் கூட்டமாக ரோட்டோரம், தெருக்களில் சுற்றி வருகின்றன. டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.வீடுகளுக்குள் புகுந்து உணவு உள்ளிட்டவைகளை சாப்பிட்டு பாத்திரங்களை சேதப்படுத்துகின்றன. பெரும்பாலான நேரங்களில் பள்ளி அருகில் சுற்றி திரிவதால் மாணவர்கள் கதறுகின்றனர். வெளியூர்களில் இருந்து பிடிக்கப்பட்டு வரும் நாய்கள் இப்பகுதிகளில் இறக்கி விட்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது. நாய்கள் மக்களை கடிப்பதற்கு முன் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.