உள்ளூர் செய்திகள்

 தேர்தல் துளிகள்

* விருதுநகர் ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கும் போது இயந்திரம் வேலை செய்யவில்லை. பழுதான இயந்திரத்தை மாற்றி புதிய இயந்திரம் பொருத்தப்பட்ட பின் 7:39 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியது. * 2021 தேர்தலின் போது விருது நகர் மாவட்டத்தில் மதியம் 1:00 மணி நிலவரப்படி 41.79 சதவீதம் பதிவானது. 2026 நேற்று 57.27 சத வீதம் தோராயமாக பதிவானதாக தேர்தல் இணையத்தளம் தெரிவித்திருந்தது. 2021ல் 16,68,751 ஆக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் நடந்த திருத்தம், இந்தாண்டு எஸ்.ஐ.ஆர்.,க்கு 15,09,518 ஆக குறைந்ததும் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். * 2021 தேர்தலின் போது 11,108 ஓட்டுப்பதிவு, கட்டுப்பாட்டு, விவிபாடு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது அதை விட 2375 இயந்திரங்கள் குறைவாக பயன் படுத்தப்படுகிறது. அதே நேரம் ஓட்டு போட இளைஞர்கள் ஆர்வம் காட்டியதால் ஒவ்வொரு ஓட்டுச் சாவடி வாசலிலும் 30 நிமிடங்கள் வரையிலாவது காத்திருந்து ஓட்டளிக்கும் நிலை ஏற்பட்டது. * முதல் முறை வாக்காளர்கள் பலர் காக்கி பேன்ட், வெள்ளை சட்டை அணிந்து வந்து த.வெ.க., தலைவர் விஜய் அணிந்த உடை பாணியில் ஓட்டளிக்க வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ